9ம் திகதி வரை ஊரடங்கு:இலங்கை இராணுவத் தளபதி
மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேல் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு முதல் நாளை (02) காலை 05.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்கு நாளை 05 காலை முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
011 7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.