März 28, 2025

பக்தனே வராதே: கைதானால் தனிமைப்படுத்தல்?

அரச உத்தரவினையடுத்து குப்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் அடியவர்களுக்கு ஆலய பரிபாலன சபையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய

அறிவித்தலின் பிரகாரம் பக்தர்களை வருகை தரவேண்டாமென விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வவுனியா – புளியங்குளம் பழையவாடி கிராமத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கோவிலில் பூசை நடத்திய பூசகர் உட்பட 15 பேர் நேற்று(31) மதியம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அங்குள்ள சிவநாகதம்பிரான் ஆலயத்தில் குறித்த பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றது. அதில் வெளிமாவட்டத்தவர்கள் கலந்துகொண்டதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை எனும் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 14 நாட்கள் அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.