März 28, 2025

2வது தேசிய பூட்டுதலை எதிர் நோக்கும் பிரித்தானியா

இங்கிலாந்திற்கு இரண்டாவது தேசிய பூட்டுதலை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவிக்க உள்ளார்  எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.இரண்டாவது தேசிய பூட்டுதல் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் பூட்டுதல் டிசம்பர் 2 வரை நீடிக்கும் எனத் தெரியவருகிறது.

உணவகங்கள் பார்கள் என அத்தியாவசியமற்ற கடைகள் ஒரு மாதத்திற்கு மூடப்படவுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படவுள்ளது.

பயணத்திற்கான கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.