நெல்லியடியையும் முடக்க ஆலோசனை!
நாளை (31) முதல் சில தினங்களுக்கு நெல்லியடி சந்தை, முச்சக்கர வண்டிகள் சேவை என்பன முடக்கப்படலாம் என கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஐங்கரன் அறிவித்துள்ளார்.
தற்போது இராஜகிராம பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து பலரும் நெல்லியடி மத்திய சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக உள்ளனர்.
இராஜகிராம பகுதியைச் சேர்ந்தவர்களை வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் பலரும் அதிகாலை எவருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளனர். இதனால் சில தினங்களுக்கு நெல்லியடி மத்திய சந்தை மற்றும் முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் என்பன சில தினங்களுக்கு முடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன். பருத்தித்துறை தனியார் பஸ் சேவைக்கும் தடை விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை முதல் சில தினங்களுக்கு நெல்லியடி சந்தை, மற்றும் நகர முச்சக்கர வண்டிகள் சேவை என்பன முடக்கப்படலாம் என கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் த.ஐங்கரன் அறிவித்துள்ளார்.
தற்போது இராஜகிராம பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து பலரும் நெல்லியடி மத்திய சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக உள்ளனர்.
இராஜகிராம பகுதியைச் சேர்ந்தவர்களை வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் பலரும் அதிகாலை எவருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளனர். இதனால் சில தினங்களுக்கு நெல்லியடி மத்திய சந்தை மற்றும் முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் என்பவற்றை முடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இதனிடையே பருத்தித்துறை தனியார் பஸ் சேவைக்கும் தடை விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆயினும் தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டளவில் சேவை நடைபெறும் என பருத்தித்துறை தனியார் பஸ் சேவைகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பஸ் சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும் எனவே பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்க தலைவர் அன்ரன் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரச விடுமுறையாக இருப்பதனால் சேவை மட்டுப்படுத்தப்பட்டளவில் அரை மணித்தியாலங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த கூலர் வாகனம் ஓடிய ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பலர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்நுநர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் முச்சக்கர வண்டிகள், மற்றும் நெல்லியடி கடைகளில் வேலைகள் மற்றும் நெல்லியடி சந்தை என பல்வேறு தொழில் புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.