November 22, 2024

பிரான்ஸ்: தேவலயத்தில் பயங்கரவாத தாக்குதல், 3 பேர் உயிரழப்பு!

French members of the elite tactical police unit RAID enter to search the Basilica of Notre-Dame de Nice as forensics officers wait outside after a knife attack in Nice on October 29, 2020. - A man wielding a knife outside a church in the southern French city of Nice slit the throat of one person, leaving another dead and injured several others in an attack on Thursday morning, officials said. The suspected assailant was detained shortly afterwards, a police source said, while interior minister Gerald Darmanin said on Twitter that he had called a crisis meeting after the attack. (Photo by Valery HACHE / AFP)

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள்  மீது கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான்.

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தேவாலயத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரான்ஸ் போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தனர்.
பயங்கரவாதி நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒரு பெண்ணை தலைத்துண்டித்து கொலை செய்துள்ளான். மேலும், இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.