November 25, 2024

போர் முரசு கொட்டட்டும், அண்ட சராசரங்கள் நடுங்கட்டும். வெற்றி வெற்றி !

அமெரிக்காவில் அடுத்த வாரம் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில், TRUMP வெல்வது 100% உறுதி என்பதை, இந்த INDO – PACIFIC இராஜதந்திர நகர்வு தெளிவாக சொல்கின்றது !
அமெரிக்கா மற்றும் இந்தியாவும் ஒன்றாக இணைந்து, சீனாவை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் மைக் போபியா, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பியர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களின் சந்திப்பில் கூட்டறிக்கை, நேற்றைய தினம்(27/10/2020) வெளியிடப் பட்டுள்ளது !
தற்பொழுது, பேசு பொருளாக இருப்பது தாய்வான் மற்றும் இலங்கையில் இடம்பெறும் இராஜதந்திர அரசியல் நகர்வுகள் !
சீனா தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொள்வதை, தாய்வான் முழுமையாக எதிர்க்கின்றது அமெரிக்காவின் உதவியுடன் !
அதே மாதிரி, இந்தியாவின் வட மாநிலத்தின் அருணாசலப் பிரதேசம், லடாக், சிங்கிம், உத்தரகாண்ட் மற்றும் இமாஸ்சல பிரதேச பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருப்பதும் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் சீனா தன்
இருப்பை இறுக்கமாக பிடித்திருப்பதும், இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை, தற்பொழுது இந்தியா உறுதியாக புரிந்து கொண்டுள்ளது !
அது தான், தேசியத் தலைவர் தீர்க்க தர்சனமாக சொன்ன வார்த்தை, ஈழத்தில் எம் ஆயுதப் போராட்டத்தை மெளனித்தால், அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு பல சிக்கலை ஏற்படுத்துமென்று, பல வருடங்களிற்கு முன்பே கூறியுள்ளார் மற்றும் இறுதிவரை இந்தியாவோடு நட்பாக இருப்பதையே அவர் விரும்பினார் !
புலிகளின் ஆயுதப் போராட்டம் இருந்த பொழுது இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டுப் போரினால், இந்தியாவின் தென் கோடி கடல் பிராந்தியத்திற்கு, எந்தவொரு சிக்கலுமில்லாமல், பாதுகாப்பாக இருந்தது. ஆனால், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு அந்தப் பாதுகாப்பு அற்றுப் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம், விடுதலைப் புலிகளை பல நாடுகளின் உதவியுடன் இலங்கை சேர்ந்து, புலிகளின் ஆயுதங்களை மெளனிக்க வைத்து தமிழ் இனத்தை இனப்படுகொலை செய்ததன் விளைவு மட்டுமே !
தற்பொழுது, INDO – PACIFIC பிராந்திய கோட்பாட்டில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா இந்தியா ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா சேர்ந்து எடுக்கும் பாரிய முயற்சிக்கு, இந்தியாவிற்கே பல அதிகாரங்களை கொடுத்துள்ளார்கள் !
தற்பொழுது, ஈழத் தமிழர்கள் ஒரு „சிரஞ்சீவி மலையாகவும்“ மற்றும் அதை தூக்கிக் கொண்டு, இலங்கையூடாக நகர்த்தக் கூடிய வல்லமை பெற்ற ஆஞ்சிநேயராக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிற்கு பக்க பலமாக, அமெரிக்காவின் புதிய TRUMP அரசு உதவியாக இருப்பதற்கு, கை மார்த்தாக மோடி அவர்களின் ஆதரவு, அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் TRUMPற்கு தேவை. அதை 100% உறுதி செய்துள்ளது நேற்றைய சந்திப்பு !
இந்த அமெரிக்கா இராஜதந்திரிகள் இலங்கைக்கு சென்று, தங்களின் முயற்சிக்கு இலங்கையை தமக்கு ஆதரவாக இருக்கும் படி அழுத்தமாக சொன்னதை, சீனா எதிர்த்துள்ளது !
சீனாவின் பாரிய அழுத்தத்தால், இலங்கையில் கொண்டு வரப்பட்ட 20A திருத்தத் சட்டத்தில், இலங்கை குடிமக்கள் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமென்ற பதத்தில், ஒரு சர்வாதிகார அரசியல் யாப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது ஈழத் தமிழர்களிற்கு பெரும் நன்மையை இராஜதந்திர அரசியலூடாக அமைந்துள்ளது. இந்த 20A யாப்பை, உலகத்தில் உள்ள எல்லா ஜனநாயக நாடுகளும் படித்தால், உண்மை புரியும் !
மக்களின் நண்பன்,
பராசுரன் (கனடா)