März 28, 2025

90% வேலைவாய்ப்பு கோரி ஒத்துழையாமை பிரசாரம் – பெ.மணியரசன்

மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்க 90 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒத்துழையாமை போராட்ட பிரசாரம் தொடங்கப்படும் என தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது. திருச்சியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் பெ.மணியரசன், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும்

மத்திய, மாநில தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இந்த பரப்புரை நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும்,

வெளிமாநிலத்தவர்களுக்கு நிலங்களை விற்பனை செய்யக்கூடாது, வீடுகள் வாடகைக்கு கொடுக்க கூடாது, வெளிமாநிலத்தவர்களின் வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பரப்புரை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.