இந்தியாவல்ல-உக்ரேன்:கொரேனா மூலம் அம்பலம்!
உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என அருண தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.
துருக்கியிலிருந்து வந்த இலங்கை விமானத்தில் உக்ரைனை சேர்ந்த 11 விமானபணியாளர்கள் இலங்கை வந்தனர் அவர்கள் சீதுவையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர் என அருண தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியானதை தொடர்ந்து அவர் கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அருண தெரிவித்துள்ளது.
ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர் பாதிக்கப்பட்டதால் அவருடன் ஹோட்டல் பணியாளர்களையும் தனிமைப்படுத்தவேண்டும் ஆனால் ஹோட்டல் நிர்வாகம் இதனை பின்பற்றவில்லை என சிங்கள செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஹோட்டலின் 60 பணியாளர்களில் 18 பேர் தங்கள் வீடுகளுக்கு சென்றுவருபவர்கள், அவர்களில் ஐவர் இதுவரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அருண தெரிவித்துள்ளது.
ஹோட்டல் பணியாளர்களிடம் பிரன்டிக்ஸ் தொழிலாளர்களிடம் காணப்பட்ட வைரஸ்கள் ஒரே மாதிரியானவையாக காணப்படுகின்றன இது இரண்டாவது அலை சீதுவ ஹோட்டலில் இருந்தே ஆரம்பமானது என்பதை இது புலப்படுத்தியுள்ளது என அருண குறிப்பிட்டுள்ளது.