November 22, 2024

வெடுக்குநாறி மலையில் சிங்கள படை குவிப்பு!

வடக்கின் எல்லை கிராமங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களது செயற்பாடு உச்சம் பெற்றுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரன் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் தொடுத்த வழக்கினையடுத்து அங்கு எவரும் செல்ல வவுனியா மாவட்ட நீதவான் தடைவிதித்துள்ளார்.

இந்நிலையில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப்பகுதியில் படையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

மக்கள் ஆலயத்திள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் படையினரது பிரசன்னம் கேள்வியை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே முல்லைத் தீவு மாவட்டத்தில் எல்லைப் பகுதி தமிழ்க் கிராமங்களான நாயாற்றிற்குத் தெற்கேயுள்ள, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய்மேற்கு, கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.