März 28, 2025

டயானாவிற்கு ஒழுக்காற்று:உயிரிழந்தவருக்கு இறுதி கிரியை!

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

20ம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியை இன்று (23) இடம்பெறவுள்ளது.

பெண்ணின் உறவினர்களுடன் கலந்துரையாடி இறுதிக்கிரியை மேற்கொள்ளப்படும் இடம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) உயிரிழந்தார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்தது தெரிந்ததே.