துயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா) 20/10/2020


இலங்கையில் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் இந்தியாவில் புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவருமான சதாசிவம் சதானந்தம் (சிவா) அவர்கள் (Scope of Knowledge எனும் ஆங்கில நூலாசிரியர், பாண்டிச்சேரி அறிவொளி இயக்கத்தில் முதியோர் கல்வி ஆசிரியர்) 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்
அன்னார் நெல்லியடியை சேர்ந்த அமரர்களான சதாசிவம் இலக்குமியம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் சகாயமேரி அவர்களின் நேசமிகு கணவரும், திரு.சச்சிதானந்தம் (முனைவர், பேராசிரியர் பாரிஸ் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் ஒலி பிரான்ஸ்) , நித்தியானந்தம் (பிரான்ஸ்) , செல்வராணி இரவீந்திரன் (நெல்லியடி) சிவானந்தம் (உடுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு இளவலும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அரியாங்குப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறிவித்துக் கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தகவல் சகோதரர்கள் (பிரான்ஸ்)
ச.சச்சிதானந்தம் 0033 (0)6 52 66 30 01
ச.நித்தியானந்தம் 0033 (0)6 52 41 83 46
இப்பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
