November 22, 2024

13:ஆளுநருக்கு அறிவுரை:ஆனால் அவர் கேட்கமாட்டார்?

முதலமைச்சரும் எனைய அமைச்சர்களும் ஆளுநருக்கு “உதவவும், அறிவுரை வழங்கவும்”  முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் அவற்றிற்குக் கட்டுப்படத் தேவை இல்லை. ஆளுநரிடந்தான் உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றன என அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்.

அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனை அம்பலப்படுத்தி தீர்ப்பளித்தது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சருக்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர் ஜனாதிபதிக்கு தான் பதில் சொல்ல வேண்டும். மாகாண சபையின் அங்கீகாரம் இல்லாமல் மத்திய அரசாங்கமும் நாடாளுமன்றமும் தலையீடுகளைச் செய்யலாம்.

மாகாண  அமைச்சர்களுக்கு தமது அமைச்சுக்களுக்கான நிறைவேற்று அதிகாரத்தை கையாளும் அதிகாரம் இல்லை. ஆளுனரிடமே நிறைவேற்று அதிகாரம் இருக்கும்.  ஆகவே, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்களுக்கா அல்லது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கா அமைச்சுக்களுக்கான அதிகாரம் ,ருக்கிறது என்பதை நாங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

13 ஆவது திருத்த சட்டம் வெளிப்பார்வைக்கு ஒரு அதிகார பகிர்வுக்கான கட்டமைப்பு போல தெரியும். ஆனால்,   அதனை நன்றாக படித்துப்பார்க்கும்போதும் அனுபவ ரீதியாக உணரும்போதும் தான் அது ஒரு கானல் நீர் என்பது புரியும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.