எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது!
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி செயலர் நளின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில், அதிமுக இளைஞர் பாசறை துணை
செயலாளர் விஷ்ணு பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டு காட்சியகத்தை திறந்துவைத்தனர். இந்த காட்சியகத்தில் கார்
பந்தையத்தில் பங்கேற்கும் நவீன கார், கரும்பு ஆலையில் கரும்பின் கனுவை பிரித்தெடுக்கும் இயந்திரம், வாகனங்களை கட்டுப்படுத்தும் கருவிகள் உட்பட சுமார் 15 வகையிலான புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக,
இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு மாணவர்களால் வரையப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.