Mai 13, 2025

வவுனியாவில் இருவர் கொலை! ஒருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவு கிராமத்தின் வீடொன்றில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்குத் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வெட்டுக்காயங்களுடன் இருந்து இரு சடலங்களை மீட்டுள்ளனர். அத்துடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் மற்றும் 34 வயதுடைய கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த மற்றொரு நபரும் உயிரிழந்தாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தைக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.