März 28, 2025

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம்!

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில்  எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10,30மணியளவில்  ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முதற் தடவையாக வந்திருந்த அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தர உள்ளார் என்ற தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக  அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும்  அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞன் மண்டபத்தில் ஆரம்பமாகின்றது குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான  சித்தார்த்தன் சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபைத் தலைவர் சிவிகேசிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்