யாழ் தொல்புரத்தில் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட களநாள் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!
உலகளாவிய ரீதியில் மக்களை சவாலுக்குட்படுத்தி இருக்கும் கொவிட்-19 நோய் தொற்று அச்ச நிலைமையில் இலை மரக்கறிகளின் உற்பத்தியை, நுகர்வினை வீட்டுத் தோட்டங்களிலும், வர்த்தக ரீதியிலும் ஊக்கிவித்து கிராமிய பொருளாதாரத்தை, கிராமிய போசணை மட்டத்தை வலுப்படுத்துவதனை ஊக்குவிக்கும் முகமாக தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவினரின் ஏற்பாட்டில் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட களநாள் நிகழ்வு தொல்புரம் கிராமத்தில்இடம் பெற்றது.
கறிமுருங்கை செய்கையில் நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள், வறட்சியை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் என்பன தொடர்பாக போதானாசிரியர்களால் விவசாயிகளுக்கு செய்முறை ரீதியாக விளங்கப்படுத்தபட்டதோடு குறைந்த செலவில் அதிக பயனை பெறும் பயிர்ச்செய்கைமுறைதொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது
தற்போதைய கொரோணா தொற்று அச்ச நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட விவசாயிகளின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர்,விவசாய போதனாசிரியர்கள்.விவசாய திணைக்கள உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.