11 நாள் தொடர்ச்சியாக 12,000 கி.மீ பறந்து சாதனை படைத்த பறவை!
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலந்து வரை 11 நாள்கள் நிற்காமல் பறந்து உலகச் சாதனைப் படைத்துள்ளது பார்-டெயில் கோட்விட் (bar-tailed godwit) என்ற பறவை.கடந்த மாதம் 16ஆம் திகதி அலாஸ்காவிலிருந்து தொடங்கிய பறவையின் பயணம் 11 நாள்களுக்குப் பின் ஆக்லந்தில் நிறைவுபெற்றது.
11 நாளில் 12,000 கிலோ மீற்றர் (7500 மைல்) தூரத்தை உணவு மற்றும் நீர் அருந்தாமல் நித்திரை கொள்ளாமல் இழைப்பாறாமல் தொடர்ச்சியாகப் பறந்துள்ளது.
பறவையில் இடது காலில் ஒரு துணைக்கோள அடையாளக் குறியை விஞ்ஞானிகள் பொருத்தி அதனைக் கண்காணித்துள்ளனர்.