November 23, 2024

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

தற்போதைய கொரோணா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோணா நிலவரம் தகட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும் யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள்

கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது pcR பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காண ப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணாதொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது இருந்தபோதிலும் யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோணா தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும் தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
மேலும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன.எனினும் இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.எனவே அரசாங்கத்தினால் நிர்னயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் அதிக விலையில் விற்க பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தொலைபேசி இலக்கமான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவலைத் தர முடியும்.

பொதுமக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுப்போம்.எனவே பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்