März 28, 2025

சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்கப்படும்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுக்கு வர தயாராக உள்ளது என்று கூறினார்.

இரண்டாம் குத்து’ படத்தின் டீசர் மற்றும் போஸ்டரின் ஆபாசம் குறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பதிலுக்கு பாரதிராஜாவை சாடினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளப்பின. இதை தொடர்ந்து பாரதிராஜாவிடம் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமாரமன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.