März 28, 2025

லண்டனில் தமிழ் பாலகன் பரிதாப மரணம்.

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் லண்டன் (கேய்ஸ்) Hayes பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் தனது தாயுடன் Hayes – Uxbridge சாலையில் சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்விகமாக கொண்ட சசிகரன் அகர்வின் வயது 4 என்ற சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.