November 22, 2024

ஈடாடுகின்றது சந்திரகுமார் கட்சி?

முன்னாள ஈபிடிபி பிரமுகரான சந்திரகுமாரது சமூக சமத்துவ கட்சி ஆட்டங்காண தொடங்கியுள்ளது.அக்கட்சியிலிருந்து ராஜ்காந்தன் என்பவர் கட்சியில் இருந்து வெளியெறியிருக்பிறார் அதற்கான காரணத்தை வினவியபோது தேசியத்துக்கு எதிராக செயற்படுவதாலும் கட்சி தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதனாலும் அக்கட்சியிலிருந்து விலகினேன் என்ற காரணத்தை கூறியிருந்தார்.

ஏற்கனவே தியாக தீபம் திலீபனது நினைவு தினத்தை கொண்டாடுவதற்கு அரசு எச்சரிக்கைவிடுத்திருந்தமையை எதிர்த்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்த போதிலும் சமூக சமத்துவக் கட்சி அதிலிருந்து பின்வாங்கியமையையும் அவர் எதிர்த்திருந்தார் .

தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படும் அக்கட்சியில் தாம் தொடர்ந்தும் இருந்தால் இம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் தன்னை பிரதேச சபை உறுப்பினராக்கிய மக்களுக்கும் தாம் துரோகம் செய்வதாக அமைந்துவிடும் என்ற சமூக சிந்தனையோடுதான் கட்சியில் இருந்து விலகியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார் .

அவர் ஒரு முன்னாள் போராளி என்பதும் அவருடைய தந்தை நாட்டுப்பற்றாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது வெளியேற்றத்தைத் தொடர்ந்து கட்சியின் பல செயற்பாட்டாளர்களும் உறுப்பினர்களும் வெளியேற தொடங்கியுள்ளனர்.

இதனிடையே டக்ளஸின் கிளிநொச்சி வருகை,சிறீதரனின் செயற்பாடுகள்,கருணாகரன் போன்றவர்களை நம்பிய செயற்பாடுகளால் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.