கொவிட்- 19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திரையரங்குகள், இரவு கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.