சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை கணினிமயப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி!
சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை கணினிமயப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி நெறி மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் அரசாங்க அதிபர் க. மகேசன் , மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் , சமுர்த்தி பணிப்பாளர் தி. விஸ்வரூபன், சமுர்த்தி கணக்காளர் இ. முருகதாஸ், சிரேஷ்ட முகாமையாளர் ஆர். இரகுநாதன், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்தல் மூலம் சேவைகளை வினைத்திறனாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடிவதோடு சமுர்த்தி பயனாளிகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப் பயிற்சிநெறியின் வளவாளராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் த. பவளேந்திரன் கலந்து கொண்டு விரிவுரையை மேற்கொண்டார்.