நான் றோவிடம் பணம் பெற்றேனா: மணிவண்ணன் கேள்வி?
சி.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டிணைவு முயற்சி முன்னெடுக்கப்பட்ட போது அவர் கொள்கை அற்றவர் என வியாக்கியானம் செய்யப்பட்டது. ஆனால் அதே
காலத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்க முற்பட்ட அதுவும் கொள்கையற்றவரென இப்போது கூறப்படுகின்ற என்னை தேர்தலில் போட்டியிட கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் கெஞ்சியிருந்தனர்.>தரப்புக்களுடாக என்னை தேர்தலில் போட்டியிட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதை அம்பலப்படுத்தியிருந்தார் வி.மணிவண்ணன்.நான் இணைந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் முன்னணி தேர்தலில் தோல்வியடையுமென தெரிவிக்கப்பட்டதையடுத்தே தேர்தலில் போட்டியிட சம்மதித்தேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்பதுதான் முன்னணியின் கொள்கையாக இருந்ததாவெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்க மேற்கொண்ட முயற்சி கூட பதவி வெறியர்களால் குழப்பபட்டது.
ஆகக்குறைந்தது 3 ஆசனங்களை பெற முன்னெடுக்கப்பட்ட முயற்சி சிதறிக்கப்பட்டது.
என்னை வாக்களிப்பன்று கூட இந்திய றோவிடம் பணம் பெற்றதாக கூட பிரச்சாரம் செய்யப்பட்டது.
வாக்கெண்ணும் தினத்தன்று கூட என்னை தோற்கடிக்க சதி செய்யப்பட்டது.
இது பற்றி அன்றிரவு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசிய போது எங்களிடையே பிளவை முன்னெடுக்க மேற்கொள்ளப்படும் சதியென்றார்.
அதுவும் செல்வராசா கஜேந்திரனின் சதிகள் பற்றி பேசிய போதும் அதனை மறுதலித்து பிளவுக்கான சதி என தெரிவித்தார் எனவும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.