März 28, 2025

சம்பிக்கவிற்கு பயணத்தடை?

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு கொழும்புமேல் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.

2016ம் ஆண்டில் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தால் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று (29) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கடவுச் சீட்டுக்களை விநியோகிக்க வேண்டாம் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்பிக்க ரணவக்கவின் சாரதியினை கைதுசெய்யவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.