November 21, 2024

ஆமி திறந்து வைக்கும் நல்லிணக்கம்?

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்கம் மய்யம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பலாலி படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

பலாலி படைத்தளத்தின் 51ஆவது பிரிவின் மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க என்பவர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, நல்லிணக்க மய்யத்தைத் திறந்து வைத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நல்லிணக்க மய்யத்தின் ஊடாக எதிர்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாணவர்களுக்கான சிங்கள இரண்டாம் மொழி கற்கை, சிங்கள கலை கலாசார நிகழ்வுகள், இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்படும் என, நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம விருந்தினர் மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்;.

தெற்கு ஆட்சி மாற்றத்தின் பின்னராக வடகிழக்கில் இராணுவ மேலாதிக்கம் வலுப்பெற்று வருகின்ற நிலையில் மக்களிடையே எதிரான மனோநிலையும் கூர்மை அடைந்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பில் தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை போக்க படை தரப்பு அதீத முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.