März 28, 2025

அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி!

நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த ஏ.கே.ஆர். நிறுவனத்தின் நிறுவுனர் அன்ரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி ஞாயிறு வரை நானாட்டான் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

சுமார் 36 விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்ட குறித்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதி சுற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.

குறித்த போட்டியானது மன்னார் பள்ளிமுனை சென் லூசிய உதைபந்தாட்ட கழகத்திற்கும் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய உதைபந்தாட்ட கழகத்திற்கும் இடையில் இடம் பெற்றது.

இதன் போது பள்ளிமுனை சென் லூசிய உதைபந்தாட்ட கழகம் 4:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற உதைப ந்தாட்ட கழகங்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் வெற்றி கேடையம் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது.

இறுதி நிகழ்வில் ஏ.கே.ஆர். நிறுவனத்தின் பணிப்பாளர் றொஜன் ஸ்ராலின், நானாட்டான் பிரதேசெயலாளர்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு பணப்பரிசில்கள் மற்றும் வெற்றி கேடையம் ஆகியவற்றை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.