கர்த்தாலினால் முடங்கியது வடமராட்சி ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில்!
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலிற்கு வடமராட்சி மக்கள் பூரண ஆதரவினைவழங்கியுள்ளார்கள். இன்றைதினம் கர்த்தாலினால் பருத்தித்துறை மந்திகை,நெல்லியடி, நகரம்முற்றாக முடங்கியது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பது குறைவாகவே காணப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன். 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அந்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள். எனினும் நேற்றைய தினத் திலிருந்து அரசஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் இன்றைய கர்த்தாலினை குழப்புவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தமிழ் மக்கள் கத்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கி உள்ளனர்.
இதே வேளை தனியார் சிற்றூர்தி உரிமையாளர்கள் கடுமையான மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் பருத்தித்துறை யாழ்ப்பாண வழி தனியார் போக்கு வரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகிறது. இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளும் சேவையில் ஈடுபட்டுக் கோண்டிருக்கின,றனர் எனினும் பயணிகள் மிக மிக குறைந்தளவிலேயே காணப்படுகின்றனர்.
இதே வேளை டான் தொலைக்காட்சி ஊடகவியலாளர் நெல்லியடி நகரில் செய்தி சேகரித்திக் கோண்டிருந்த வேளை பொலிசாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதுடன் ஊடக அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டு அவரது தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கப்பட்டு கடுமையான மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.