März 28, 2025

கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு ?

நினைவேந்தலை ,தடையை கண்டித்து முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை (28) வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், குறித்த வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்திற்கு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.