November 25, 2024

இந்திய மீனவர்கள் அத்து மீறிய மீன் பிடியால் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்!

கடந்த சில  வருடங்களாக ஓரளவு குறைந்தந்திருந்த இந்திய மீனவர்களின் வருகை தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகரித்திருப்பதாகவும், இதனால்நாளாந்தம்  தமது கடற்றொழில் உபகரணங்கள் வலைகள் என்பன நாளாந்தம் சேதமாவதாகவும், இதனால் பலர் தொடர்ந்தும் கடற்றொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும், வங்கிகளில் பெற்ற கடனை கூட செலுத்த முடியாதுள்ளதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் மருதங்கேணி, வத்திராயன் பகுதிகளில் பலரது வலைகள் இந்திய ரோளர் படகுகளால் பல இலட்சம் பெறுமதியான வலைகள்  அறுக்கப்ட்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் , தெரிவித்த மீனவர்கள் ,

இந்திய மீனவர்களின் வரிகையை தடுத்தும் மீன் பெருக்கிடங்களை அழிக்கும் சட்டவிரோத மீன் பிடி தொழிலையும் கட்டுப் படுத்த உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அண்மையில் வடமராட்சி கிழக்கு மீனவர்களால் இந்திய மீனவர்கள் வருகை மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகை , சட்டவிரோத மீன்பிடி  ஆகியவற்றை கட்டுப்படுத்தக் கோரியும் மருதங்கேணியில் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்த  முற்பட்டபோது பளை பொலிசாரால் நீதி மன்றம் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிட தக்கது.

வடமராட்சி