இது தெரியவில்லை என்றால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும்: WHO எச்சரிக்கை
கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
WHO அறிவியல் மற்றும் சான்றுகளை நம்புகிறது. அதனால்தான் அறிவியல், தீர்வுகள் மற்றும் ஒற்றுமை என்று நாங்கள் கூறுகிறோம்.
ஊடக நேர்காணல் ஒன்றில் கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து வந்தது என்று யாரோ ஒருவர் சொன்னார் என்று இந்தியாவில் இருந்து எங்கள் சக ஊழியர் கேட்டர்.
ஆனால் எங்களைப் பொருத்தவரை, இதுவரை நாம் பார்த்த அனைத்து வெளியீடுகளும், வைரஸ் இயற்கையாகவே தோன்றியது என்று கூறுகின்றன என்று WHO தலைவர் கூறினார்.
முந்தைய ஆய்வுகளின் படி கொரோனா விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. அவை தோன்றிய விலங்கு மற்றும் அதை மனிதர்களுக்கு பரப்பியதை எப்படி என அடையாளம் காண குறிப்பிட்ட நேரம் மற்றும் மிகவும் விரிவான விசாரணைகள் தேவை என WHO சுகாதார அவசரகால திட்டத்தின் கொரோனா நடவடிக்கையின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறினார்.
அது தோன்றிய விலங்கு மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கடத்தியது எப்படி என்று தெரியவில்லை என்றால், அது மீண்டும் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று மரியா வான் கெர்கோவ் கூறினார்.