November 22, 2024

செயலிழக்கும் டக்ளஸ்:முளைக்கும் தரகர்கள்?


சொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு சுமந்திரன் தேவையோ அதே போல டக்ளஸிற்கு எல்லாமுமாக இருப்பவர் தயானந்தா என்றழைக்கப்படும் அவரது சகோதரரே.

டக்ளஸ் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் முதலிடுவது தொடக்கம் அவரது புதிய வருவாயை பார்த்துக்கொள்வது வரை அவருடன் ஒட்டிக்கொண்டிருப்பவர் தயானந்;தா.

டக்ளஸின் அரசியல் பயணம் அந்தரத்தில் நிற்கும் துன்பம் அவரும் மூளை வளம் கொண்ட எவருமே பகிரங்கமாக இணைவதில்லையென்பதாலாகும்.

ஆனாலும் தற்போது முற்றுமுழுதாக குழம்பியிருக்கின்ற டக்ளஸிற்கு அறிக்கை எழுதிக்கொடுக்க புறப்பட்டிருக்கின்ற சிந்தனை சிற்பிகள் சிலர் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகையில் தமிழ் ஊடகவியலாளர்களிற்கு புலி சாயமடிக்க மும்முரமாக செயற்பட்டவர் கோடீஸ்வரன் ருசாங்கன்  என்பவர்.

கொழும்பிலிருந்து 2009 பின்னராக யாழ்.திரும்பியிருந்த இந்நபர் ஈபிடிபியுடன் தேர்தல் களம்புகுந்த போதும் மக்களது மரண அடியினால் ஒதுங்கி போயிருந்தார்.

முன்னதாக வன்னியில் புதுக்குடியிருப்பிற்கு அடிக்கடி போய் வந்த இந்நபர் பின்னர் புலிநீக்க அரசியலில்; மும்முரமாகியிருக்கிறார்.

ஆனாலும் தற்போது டக்ளஸ் மீண்டும் அமைச்சராகியிருக்கின்ற நிலையில் யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்நபரை முன்னிறுத்தி ஈபிடிபி துணைவேந்தரிற்கு குடைச்சல்களை ஆரம்பித்துள்ளது.

அண்மையில் பீடாதிபதிகள் சந்திப்பில் கண்ட நாய் எல்லாவற்றையும் பார்த்து நானும் காலை தூக்க வேண்டியிருப்பதாக ஈபிடிபி பிரமுகர் ருசாங்கனை நையாண்டி செய்திருந்தார் துணைவேந்தர் சற்குணராசா.

ஆனாலும் பகிடிவதை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அதே ஈபிடிபி பிரமுகர் ருசாங்கனிற்கு முன் வரிசை கதிரை கொடுக்கவேண்டிய நிலை துணைவேந்தரிற்கு ஏற்பட்டிருந்தது.

இதனிடையே கிளிநொச்சியில் அண்மையில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தான் எழுதிக்கொடுத்ததை டக்ளஸ வாசிக்க முடியாது திணற அதே ருசாங்கன் ஓடோடி சென்று தனது பாண்டியத்தை காண்பிக்க முற்பட்டமை கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுப்பை தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கோத்தாவை குளிர்விக்க  நாடாளுமன்றில் டக்ளஸிற்கு பேச எழுதிக்கொடுத்த அறிக்கை கடும் சீற்றத்தை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.

புலிகளுடனும் முன்னாள் போராளிகளுடனும் இணக்கமாக இருப்பதாக காட்டி தேர்தல் வாக்கு அறுவடையை தற்போதைய தேர்தல்களில் பெறுவதே ஈபிடிபியின் புதிய உத்தி.

அதிலும் செஞ்சோலை பிள்ளையொருவரை வேட்பாளராக்கி டக்ளஸே பிரச்சாரம் செய்யும் பரிதாபமும் நடந்திருந்தது.

இந்நிலையில் திலீபனை  விமர்ச்சிக்க போய் மீண்டும் மூக்குடைபட்ட கதை கட்சி உள்ளக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.