November 22, 2024

துயர் பகிர்தல் செல்லையா கனகசபாபதி

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகசபாபதி அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரதா(ஜேர்மனி), சந்திரா(ஜேர்மனி), வசிட்டன்(பிரான்ஸ்), சித்திரா(கனடா), சுபத்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜனகன், பரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரராஜா(ஜேர்மனி), கருணாகரமூர்த்தி(ஜேர்மனி), நளாயினி(பிரான்ஸ்), சோதிதாசன்(கனடா), உமாகாந்தன்(பிரான்ஸ்), கலையரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், மனோன்மணி, மகாதேவன், தனலெட்சுமி, சீதாலெட்சுமி(ஆசிரியை) மற்றும் தனபாலசிங்கம்(அதிபர்- கனடா), கமலேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, நல்லையா, சற்குணராணி மற்றும்  மகேஸ்வரி(கனடா), ஆறுமுகம்(பிரான்ஸ்), பாலசுந்தரம்(இந்தியா), விசாகப்பெருமாள்(கனடா), பாக்கியலெட்சுமி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, தவமணிதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன், சகானா, மயூரன், இலக்கியா, இந்துஜன், இந்துஜா, விதுஷா, அபிதா, ஆகாஷ், கபிலன், ஜெலிசியா, சஜிதா, அட்ஷா, அரிஷ், அதர்வன், ஆருஷன், ஆரணா, அபர்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-09-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாரதா – மகள்

சந்திரா – மகள்

வசிட்டன் – மகன்

சித்திரா – மகள்

சுபத்திரா – மகள்

பரதன் – மகன்

சந்திரபாலன் – மருமகன்

வதனி/ சதீஸ் – மகள்/ மருமகன்