தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்!
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தமிழ்நாடு கழக மேம்பாட்டு திறன் கழகத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இதன் மூலம் 50,000 பேருக்கு இலவசமாக வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ரூ.70 கோடி செலவில் ராமநாதபுரம் குஞ்சுகளில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தையும், ரூ.27 கோடியே 42 லட்சம் செலவில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் தஞ்சை, நெல்லை, ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.5 கோடியே 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும், ரூ.4 கொடியே 40 லட்சம் மதிப்பில் சென்னையில் கட்டப்பட்ட சிறுமியர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தையும் திறந்து வைத்தார்.