November 22, 2024

கடைசி நிமிடத்தில் மனம் மாறிய டிரம்ப்!

அமொிக்காவில் டிக்டாக் (TikTok) செயலியைத் தொடர்ந்து செயற்பட ஒப்புதல் அளிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஒரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் டிக்டாக் (TikTok) செயலியின்பைட் டான்ஸ் (Byte Dance) நிறுவனம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைத் தாம் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்றவகையில் அந்த உடன்பாடு அமைந்திருப்பதாய்த் டிரம்ப் கூறினார்.

தற்போது அமெரிக்காவில் 100 மில்லியன் பேர் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

திறன்பேசிகளுக்கான சீன செயலிகள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை இரவுவுடன் டிக்டாக் செயலிக்கான தடை அமுலாகும் என டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6 ஆம் திகதி கையெழுத்திட்டார்.

இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.இதற்கிடையில் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டு இருந்தது.  அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை  கூறியது.

முக்கிய திருப்பமாக டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தக்த்துறை தெரிவித்துள்ளது. ஆராக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக் டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.