März 28, 2025

அரசுக்கு ஆதரவு :பரிசீலிக்கும் சிறிதரன்?

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் செய்தி சேவை ஒன்று வினவிய போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சகல இனங்களுக்குமான தனித்துவம் பேணப்படும் வகையில் அந்த அரசியல் யாப்பு அமைய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்