März 28, 2025

மரணவீட்டிற்கு முற்பதிவு:மாகாணசபை அமைச்சருக்கு மிச்சம்?

13வது திருத்த சட்டத்தை நீக்க கோத்தாவின் எடுபிடிகள் மும்முரமாக முழங்க இந்தியா இவ்விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணி வருகின்றது.

இதனிடையே மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கையின் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாண சபை முறைமையூடாக இறந்த நபரொருவருக்கான இறுதி கிரியைகளை செய்வதற்கான முற்பதிவுகளை இணையத்தினூடாக செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் அறிவுருத்தியுள்ளார்.