மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேற போகிறோம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாராந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனை தெரிவித்தார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆரம்ப நடவடிக்கைகளாக, இலங்கையை 30/1 தீர்மானத்திலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தார். மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பேரவையில் நீடிப்பது, அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்பதாக அமைந்து விடும் என்றார்.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தியதற்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
பதிலளித்த இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ரமேஷ் பதிரானா, நியமிக்கப்பட்ட இராணுவ நபர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் என்றும் கூறினார்.