தமிழர்களை பின்தொடர சிங்கள மாணவர்களிற்கு ஆலோசனை?
யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்தில் நடப்பது பகிடி வதை அல்ல. அதுவொரு இம்சை என துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார்.இது பற்றி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் கொவிட்- 19 பின்னராக பல்கலைக் கழகத்தின் பெரும்பாலான விரிவுரைகளும் ஒன்லைனில் இடம்பெறுகிறது,
அதே போல் பகிடி வதைகளும் ஒன்லைனிலேயே இடம்பெறுகிறது.
பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைகள் மன எழுச்சியால் மட்டும் இடம்பெறவில்லை.அதில் ரெசியல் ரீதியான தாக்கமும் செலுத்துகிறதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக் கழகத்தில் பெரும்பான்மை இன மாணவி ஒருவருக்கு இடம்பெற்ற பகிடி வதை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் சிறீசற்குணராஜா தெரிவித்தார்.
ஏற்கனவே முன்னரும் சிங்கள மாணவர்களது பாலியல் பகிடி வதைகள் பற்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள ஊடகங்கள் தமி;ழ் மாணவர்களது முன்னுதாரண அடிப்படையில் சிங்கள மாணவர்களையும் கல்வியில் கவனம் செலுத்த கோரியுள்ளன.