தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்“ மாவை சேனாதிராஜா வின் அழைப்பின்பேரில் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள்
தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம் மக்கள் மனித உரிமை மனிதாபிமான செயற்பாடுகளைப் பாதுகாப்போம் எனும் நோக்கத்திற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வின் அழைப்பின்பேரில் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் த இளங்கலைஞர் மண்டபத்தில் கவிசேட கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது
குறித்த கூட்டத்தில் தமிழ் கட்சிகளின்பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சி பிரதிநிதிகள் அனைவரும்குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் இன்றைய ஜனாதிபதி கோத்தபாயவின் அரசால் மனித உரிமை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளும் அரச பாதுகாப்பு தரப்பினராலும் காவல் துறையினராலும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது இதனை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட வுள்ளது இன்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து சில தீர்மானங்களை மேற்கொள்வதற்கான யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் ஒன்று கூடி யுள்ளார்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது..