März 28, 2025

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் – அங்கஜன் இராமநாதன்

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் - அங்கஜன் இராமநாதன்

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கி 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் காலத்தின் தேவையாகும். இதனுடாக நிறைவான ஒரு அரசியமைப்பு அபிலாஷைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவகத்தில் அங்கஜன் இராமநாதன் எம்.பி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

அங்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம். அதற்காக நீண்ட காலம் போராடிக் கொண்டு தான் இருந்து வருகின்றோம்.

அதற்கான உத்தேச அரசியமைப்பு யாப்பு மூலமாக தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம்.