März 28, 2025

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர். ஆனால் ரஜினி இன்னும் தனது அரசியல் பிரவேசம் குறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மும்பையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் முரளி தர்ஷன் என்ற ரசிகருக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் குணமடைந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன் என்றும் குணமடைந்த பின் குடும்பத்துடன் வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ரஜினி அரசியல் அரியணை எற பாடுபடாமல் போகிறேனே என்று அவரது ரசிகர் கவலைப்பட்ட நிலையில் ரஜினி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.