März 28, 2025

காணொளியை ஒன்றாக இணைந்து பார்க்க வசதியை அறிமுகம் செய்தது முகநூல்

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.முகநூல் செயலியின் மெசஞ்சரில்(Messenger) வோச் ருகெதர் Watch Together எனும் புதிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஒன்றாக காணொளி ஒன்றைப் பார்த்து ரசிக்க முடியும்.

இதேபோன்று மேசஞ்சர் ரூம் (Messenger Rooms) மூலம் 50 பேர் ஒன்றாக உரையாடக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.