முகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை!
இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாத 8 பேருக்கு, சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, முகக்கவசம் அணிவது அவசியமானஒன்றாகியுள்ளநிலையில், இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் வருகின்றதினால்.
மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் கையாண்டு வருகிறது.
ஆனாலும் பலர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மறந்துவருகின்றனர்.
கிழக்கு ஜாவாவில உள்ள ஒரு கிராமத்தில் அவ்வாறு முகக் கவசமின்றிச் சுற்றித் திரிந்த 8 பேருக்கு, அதிகாரிகள் சவக்குழி தோண்டும் தண்டனை விதித்தனர்.
அவை கொரோன தொற்றினால் பலியானவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கே அந்தச் சவக்குழிகள் தோண்டப்பட்டன என்றுகூறப்படுகிறது.