März 29, 2025

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறி புரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று!

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறி புரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று(15) வவுனியாவில் கொண்டாடப்பட்டது.

வவுனியா எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம் மற்றும் வவுனியா வர்த்தகர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு சி.ஏ. இராமசாமியை கௌரவித்திருந்தனர்.

இதன்போது வர்த்தகராகவும் ஆன்மீகவாதியாகவும் உள்ள சி.ஏ. இராமசாமியின் கொடைகள் மற்றும் அவரின் வாழ்வியல் சிறப்புக்கள் தொடர்பிலும் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.