März 28, 2025

எனது மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

மாலைதீவிலிருந்து ஐ.எஸ் ஆயுததாரிகள் இருவர் இலங்கைக்குள் கடந்த நல்லாட்சியின்போது வந்திருந்ததாகவும், அவர்கள் சார்ந்த ஆவணங்கள் விசாரணைப் பிரிவுகளில் இருந்து தற்சமயம் மாயமாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஞானசார தேரர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அதன் பின் ஊடகங்களுக்கு பேசிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலமா சபையை அரசாங்கம் சீல் வைத்து அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.