März 28, 2025

மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டிங்களா?

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு யாழ்ப்பாணம் நாவாந்துறை, வசந்தபுரம் மக்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தை ஒன்றை

முன்னெடுத்துள்ளனர்.மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டீங்களா? உடைக்கப்பட்ட வீடுகள் எங்கே? நமக்கு ஏன் பாரபட்சம்? மழை வெள்ளத்திலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள், குடிதண்ணீர் வசதியைப் பெற்றுத் தாருங்கள், எமக்கான நீதி எங்கே? உள்ளிட்ட வாசகங்களைத் தாங்கியவாறு அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.