November 22, 2024

விகாரை விகாரையாக ஏறி இறங்கும் கோத்தா?

இலங்கை நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக நிறைவேற்றி தன்னிறைவான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான இலங்கை ஜனாதிபதியின் பயணத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவமிக்க அனுராதபுரம் அட்டமஸ்தானவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட இலங்கை ஜனாதிபதி நேற்று (12) முற்பகல் லங்காராமய மிரிசவெட்டிய மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைகளுக்கு சென்ற வேளையிலேயே விகாராதிகாரி தேரர்கள் இதனை தெரிவித்தனர்.

லங்காராம விகாரைக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி, விகாராதிகாரி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரரை சந்தித்து உரையாடினார். விகாரையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி, புனித பூமிக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் உரையாடினார்.

இலங்கை ஜனாதிபதி மிரிசவெட்டிய விகாராதிகாரி சங்கைக்குரிய ஈத்தல வெட்டுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரரைக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி, சங்கைக்குரிய நுகேதென்னே ஸ்ரீ பஞ்ஞானந்த தேரரை சந்தித்து உரையாடினார்.