Mai 12, 2025

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர் போராட்டம்?

வடமராட்சிக கிழக்கில் அத்துமீறி வருகை தந்துள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதற்கு  வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

வெளி மாவட்ட மீனவர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோத அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை  வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமராட்சிக்கிழக்கு தொழிலாளர் கடல் தொழில் கூட்டுறவு சங்கம் சமாசம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் காலவரையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர் சண்முகநாதன் அறிவித்துள்ளார்.