நிலவிலிருந்து கற்கள் ,மண் கொண்டுவந்து விற்கலாம்!
நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு NASA திட்டமிட்டுள்ளது.
நிலவில் உள்ள வளங்களைக் கொண்டுவரும் நிறுவனங்களுக்குத் தகுந்த தொகை வழங்கப்படும் என்று NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் நிலவிற்கு இயந்திர மனிதக் கருவிகளை அனுப்பி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம்.
நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் பொருள்கள் தனது சொத்தாகிவிடும் என்றது NASA.
NASAவின் Artemis திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டிற்குள், அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் நிலவில் கால்பதிக்கவேண்டும் என்பது இலக்கு. அப்போது நிலவிலிருந்து மேலும் வளங்களைத் திரட்ட வாய்ப்புள்ளதாக NASA தெரிவித்தது.